15 C
Scarborough

பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா நிதி உதவி!

Must read

பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா நிதி உதவி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய கடும் பருவமழை மற்றும் வெள்ளப் பேரழிவால் சுமார் 40 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, 900 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆப்கான் அகதிகளுக்கும் உதவியாக கனடா 2.6 மில்லியன் கனேடிய டாலர் மனிதாபிமான உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ரன்தீப் சராய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்திற்கு இரண்டு மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.

இது பெரும்பாலும் ஆப்கான் அகதிகளை ஆதரித்து வந்தாலும், தற்போது அவசர நிவாரண பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்துக்குப் பிறகும், கனடா 58 மில்லியன் டாலர் உதவியை பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article