போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொது மக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமுலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் அனைத்து உயிரிழப்புகளும் நிகழ்ந்திருப்பதாகவும், காயமடைந்த 59 பேரில் 44 பேர் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.