இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்றது.
மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில், அதிரடியாக விளையாடிய தசுன் ஷானக 34 ஓட்டங்களும் குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், 161 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில், சல்மன் அஹா 46 ஓட்டங்களை அணிக்காக பெற்று கொடுத்தார்.
இறுதியில், 1-1 என்ற கணக்கில் இந்த டி20 தொடர் சமநிலையில் முடிந்தது.

