பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கையில் ஏழு ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் இன்று (03) தெரிவித்துள்ளது.
ஆயுததாரிகள் இருப்பதாகக் கூறப்பட்ட தகவலின் பேரில் மாகாணத்தின் ஷெரானி மாவட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆயுததாரிகளை அவர்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் திறம்படத் தாக்கினர், இதன் விளைவாக ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்று ISPR தெரிவித்துள்ளது,
மேலும் ஆயுததாரிகளின் மறைவிடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.