பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையிலுள்ள வடமேற்கு பகுதியிலுள்ள டோர்காம் முக்கிய எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் எல்லை நிலையங்களைக் குறிவைத்து தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசிடம் இருந்து உடனடியாக பதில் ஏதும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.