பாகிஸ்தானில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய (20) நிலவரப்படி 203 போ் உயிரிழந்துவிட்டதாகவும் 454 போ் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 200-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததோடு தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளமையால் பல இடங்களில் போக்குவரத்தும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.