பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 351 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
வெள்ளத்தினால் கைபர் பக்துன்க்வா மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 328 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கில்கிட்-பால்டிஸ்தானில் 12 பேரும், ஆசாத் காஷ்மீரில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை கடுமையான மழை நீடிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், இதனால் மேலும் உயிரிழப்புகள் மற்றும் அழிவு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த அநர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் விதமாக, பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிக்க, மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அவசர நிவாரணங்களை கைபர் பக்துன்க்வாவுக்கு விரைந்து எடுத்து செல்லுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.