பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிந்து மாகாணத்தில் மேலும் 150,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜூன் மாத இறுதியில் இருந்து பாகிஸ்தான் முழுவதும் பருவமழையால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.