பாகிஸ்தானின் டெஸ்ட் போட்டிகளுக்கான பதில் தலைமைப் பயிற்சியாளராக அஸார் மஹ்மூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது நடப்பு ஒப்பந்த முடிவு வரையில் அஸார் பணியாற்றுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதில் தென்னாபிரிக்கா, இலங்கைக்கெதிரான தொடர்கள் உள்ளடங்குகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தற்காலிக அடிப்படையில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பாக நியமிக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தானின் உதவிப் பயிற்றுவிப்பாளராக அஸார் இருந்து வருகிறார்.
ஜேஸன் கிலெஸ்பி தனது பதவிக் காலத்தில் ஆறு மாதங்களில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தென்னாபிரிக்காவுக்கெதிரான சுற்றுப் பயணம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரில் தற்காலிகமாக ஆகிப் ஜாவீட் பணியாற்றியிருந்தார்.