19.8 C
Scarborough

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கண்கள் 2 குழந்தைகளுக்கு!

Must read

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கண்கள், 2 குழந்தைகளுக்கு நாளை பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

87 வயதைக் கடந்த சரோஜா தேவியின் கண்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும், பிறருக்குப் பொருத்த ஏதுவாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, உடல்நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன், இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் சரோஜா தேவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article