கியூபெக் மாநிலப் பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு, கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் (Fédération autonome de l’enseignement – FAE), மாகாண அரசாங்கத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது.
தங்கள் உறுப்பினர்களில் 90 சதவீதமானோர் பணியிடங்களில் ஏதோ ஒரு வடிவத்தில் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று, ஓர் அதிர்ச்சியூட்டும் கணக்கெடுப்பு முடிவு வெளியான பின்னரே இந்த வலியுறுத்தல் வந்துள்ளது.
சுமார் 65,000 ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் தொழிற்சங்கமானது, ’கல்வியாளர்களுக்குப் பாதுகாப்பான பணியிடத்திற்கான அடிப்படை உரிமை உள்ளது’ என்று வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தல் மற்றும் உடல் ரீதியான தீங்குகளைச் சமாளிப்பதற்கு, புதிய உத்திகளை உருவாக்கிச் செயல்படுத்துவதற்காக கியூபெக் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு, ஆசிரியர்கள் தொழிற்சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

