20.7 C
Scarborough

பராமரிப்பு பணிக்காக பிரான்ஸ் அருங்காட்சியகம் மூடல்!

Must read

பிரான்ஸின் பாரிஸில் உள்ள பாம்பிடோ மையம் என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது

இந்த அருங்காட்சியகமானது தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்களாலும் பழங்கால பொருட்களுக்காகவும் பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த அருங்காட்சியகம் 1977ஆம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆண்டுக்கு 32இலட்சம் பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் பராமரிப்பு பணிக்காக இந்த அருங்காட்சியகம் மூடப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு நடைபெறவுள்ள இந்த பராமரிப்பு பணி முடிக்கப்பட்டு வருகிற 2030ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article