3 C
Scarborough

‘பராசக்தி’ படம் கிடைக்க பராசக்தி அருளே காரணம் – சிவகார்த்திகேயன் பூரிப்பு

Must read

சிவ​கார்த்​தி​கேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா நடிப்​பில், சுதா கொங்​கரா இயக்​கி​யுள்ள படம், ‘பராசக்​தி’. டான் பிக்​சர்ஸ் சார்​பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ்கு​மார் இசை அமைத்​துள்​ளார். 1960-களின் பின்னணி​யில் உரு​வாகி​உள்ள இப் படம், ஜன. 14-ல் வெளியாகிறது. இன்​பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்​படத்தை வெளி​யிடு​கிறது.

இந்​நிலை​யில், இப்​படத்​தில் 60-களின் கால​கட்​டத்​தைக் கொண்டு வர பயன்​படுத்​தப்​பட்டகார்​கள், ரயில், ரயில் நிலைய செட் மற்​றும் அந்​தக்​கால பொருட்​களை வைத்​து, பராசக்தி பட உலகை செட் மூலம் வள்​ளுவர் கோட்​டத்​தில் உயிர்ப்​பித்​துள்​ளனர். பொது​மக்​கள் பார்​வை​யிடும் வகை​யில் இது கண்​காட்​சி​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

டிச. 21-ம் தேதி வரை இதைப் பார்​வை​யிடலாம். இதன் அறி​முகவிழா​வில் சுதா கொங்​க​ரா, தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் மற்​றும் படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். அப்​போது சிவ​கார்த்​தி​கேயன் பேசி​ய​தாவது, “இயக்​குநர் சுதா கொங்​க​ரா, இந்​தப் படத்​துக்​காக 5 வருடம் உழைத்​திருந்​தார். இந்​தப்​படம் செய்​வது எல்​லோருக்​குமே கஷ்டம் தான். அதை எல்​லோரும் ஏற்​றுக்​கொண்டு உழைத்​துள்​ளார்​கள்.

ஸ்ரீலீலாவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன். அவருடன் நடித்​தது நல்ல அனுபவம். அவருடன் கஷ்ட​மான டான்ஸ் மூவ்​மென்ட் தராததற்கு டான்ஸ் மாஸ்​டருக்கு நன்​றி. ரவி மோகன் சார் இந்​தப்​படத்​துக்கு ஒப்​புக்​கொண்​டது எனக்கு ஆச்​சரி​யம் ஹீரோ​வாக கதை கேட்​டுத் தேர்ந்​தெடுப்​பதே கஷ்டம். ஆனால் ஹீரோ​வாக ஹிட் படங்​கள் கொடுத்​துக்​கொண்​டிருக்​கும் போது, வில்​ல​னாக ஒப்​புக்​கொள்​வது மிகப்​பெரிய விஷ​யம்.

இது​போன்ற டீம், இந்த மாதிரி ஒரு கதை, எனக்கு 25 வது படமாகக் கிடைத்​தது என் வரம். பராசக்தி அருள்​தான் காரணம். பராசக்தி ஒரு முக்​கிய​மான பிரச்​சினையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்​லா​வற்​றை​யும் பேசும் படமாக இருக்​கும்” என்​றார்.

hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article