14.8 C
Scarborough

பயங்கரவாத குழுவில் இணைய முயன்றவர் சிக்கினார்!

Must read

கனடாவை விட்டு வெளியேறி பயங்கரவாதக் குழுவுடன் சேர முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒன்ரோரியோவை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக (RCMP) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளியீட்டுத் தடை காரணமாக குறித்த நபர் யார் அவர் எந்த அமைப்பில் சேர முயற்சித்தார் போன்ற மேலதிக விடயங்கள் வெளியிடப்பவில்லை பொலிஸார் கூறினர்.

ஏப்ரல் 19 அன்று பயங்கரவாத அமைதிப் பத்திர விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கும் தகவலை வெளியிடுவதற்கு பொது வழக்குத் தொடரல் இயக்குநரும் கனடாவின் பிரதி அட்டோனி ஜெனரலும் ஒப்புக்கொண்டதாக RCMP தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் ஏப்ரல் 20 ஆந் திகதி பிரம்டொன் நீதிமன்றத்தில் முதன்முதலில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு எப்பொழுதுமே RCMP ஒன்ரோரியோவின் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்கக் குழு முன்னுரிமை அளிக்கும் என்று கூறியதுடன் இந்த விசாரணையில் உதவியதற்காக (INSET) Peel Regional Police, Canada Border Services Agency, Public Prosecution Service of Canada மற்றும் Pacific Region INSET ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article