கனடாவின் ஒட்டாவாவில் பணி நேரத்தில் தகாத செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரிச்சர்ட் லெமே என்ற அதிகாரிக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பணி நேரத்தில் அதிகார வாகனத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணை அழைத்துச் சென்று, பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் இதற்காக குறித்த அதிகாரி 12 மாதங்களுக்கு பதவி தாழ்த்தப்பட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2008 அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்தது.
லெமே, 2008 ஆகஸ்ட் மாதத்தில் அந்த பெண்ணை முதன்முதலாக சந்தித்தார். அப்போது அவர் அந்த பெண்மணியின் அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட குழப்ப சம்பவம் ஒன்றுக்கு தொடர்பில் விசாரணைக்காக சென்றிருந்தார்.
பின்னர் இருவரும் குறுஞ்செய்தி ஊடாக தொடர்பு கொண்டு, நெருக்கமான உறவை வளர்த்தனர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின்போது லெமே தனது போலீஸ் வாகனத்தை பயன்படுத்தி பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட காரணத்தினால் அவர் பதவி தாழ்த்தப்பட்டுள்ளார்.
முதல் தர கான்ஸ்டபிள் பதவியில் இருந்து இரண்டாம் தர கான்ஸ்டபிளாக 12 மாதங்களுக்கு தாழ்த்தப்பட்டுள்ளார். 2002ம் ஆண்டு முதல் பொலிஸில் பணியாற்றி வரும் லெமா அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.