9.5 C
Scarborough

பணம் கையில் சரளமாக புழங்கும் நாள்-இன்றைய ராசிபலன் (12-12-2025)

Must read

மேஷம்

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் உறவினர் மற்றும் மனைவிவழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

ரிஷபம்

மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டினை விரிவுபடுத்த வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். ஆனாலும், பூர்வீகச் சொத்து, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணம் கையில் சரளமாக புழங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

மிதுனம்

அரசுத் தேர்வு எழுதும் வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

பிரபலங்கள் உதவுவார்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியங்களை துரிதமாக முடித்துக் காட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது இடம் அல்லது புது வீடு வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

சிம்மம்

அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

கன்னி

மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம். பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

தனுசு

வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். தங்க ஆபரணங்கள் அதிகம் வாங்குவீர்கள். புதிய வாகனத்தை வாங்க பழைய வாகனத்தை விற்று விடுவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

புதுச் சொத்துக்கள் வாங்குவீர்கள். செல்வாக்கு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். வியாபாரிகளின் விற்பனைப் பொருட்கள் நல்ல லாபத்தை காணும். வழக்கு சாதகமாகும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article