13.2 C
Scarborough

படகு கவிழ்ந்து 69 பேர் வரையில் உயிரிழப்பு

Must read

மேற்கு ஆபிரிக்காவின் கெம்பியா, செனகல் நாடுகளைச் சேர்ந்த 160 இற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் படகுப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகில் சென்றபோது இடம்பெற்ற இவ்விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 100 பேர் காணாமல் போயுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மொரிடேனியா கடற்படையினர் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 17 பேரை மீட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

2024 ஆம் ஆண்டு ஜூலையில், இதேபோன்ற ஒரு சம்பவத்தில் மொரிட்டானியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் வழியில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டனர், மேலும் 150 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

வறுமை காரணமாக ஆப்பிரிக்க மக்கள்
அட்லாண்டிக் பெருங்கடல் ஊடாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article