வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர்.
சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாயமான 50 பேரில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதி 40 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.