நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அந்த மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலாம் மாவட்டத்தில் ஏழு பேரும், மன்சிபங்க் மாவட்டத்தில் ஐந்து பேரும் கோசங் மாவட்டத்தில் ஆறு பேரும் என மொத்தம் 18 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.இதேநேரம் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை நேபாளத்தில் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் 22 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

