15.4 C
Scarborough

நேட்டோ மற்றும் கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடுகளுக்காக ஐரோப்பா பறக்கிறார் பிரதமர் கார்னி!

Must read

NATO மற்றும் கனடா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் குறித்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் Mark Carney வார இறுதியில் ஐரோப்பா செல்கிறார். பிரதமரின் பயணத் திட்டங்களை அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய தலைவர்களைச் சந்திக்க Carney ஞாயிற்றுக்கிழமை Brussels க்குச் செல்வார். பிரதமரின் இப்பயணத்தின் போது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் மீது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. பின்னர் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும் NATO உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக Carney, Netherlands இல் உள்ள Hague நகருக்கு செல்லவுள்ளார்.

NATO உச்சிமாநாடு பாதுகாப்பு செலவினங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளது. அந்தவகையில், NATO நட்பு நாடுகள் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு செலவின இலக்கை தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1950 களில் இருந்து கனடா எட்டாத ஒரு இலக்காகும்.

இந்நிலையில், இந்த ஆண்டு நிதி கட்டமைப்பில் 9 பில்லியன் டொலர்களைச் சேர்ப்பதன் மூலம், தற்போதைய NATO இலக்கை அடைய கனடா தனது இராணுவச் செலவு காலக்கெடுவை விரைவாக முன்னேற்றும் என்று Carney கடந்த வாரம் அறிவித்தார்.

கனடா அதன் மிகப்பெரிய நட்பு நாடுகளுக்கு பல ஆண்டுகளாக இரண்டு சதவீதத்தை செலவிடுவதாக உறுதியளித்திருந்தாலும், 1990 முதல் இரண்டு சதவீதத்திற்கு அண்மித்த தொகையைக் கூட செலவிடவில்லை. தற்போது மத்திய அரசு முதன்முறையாக உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.45 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article