14.5 C
Scarborough

நிலநடுக்கத்துக்கு ஈடுகொடுக்கும் கட்டுமானங்கள் – கனேடிய ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு!

Must read

நிலநடுக்கங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையிலான திறனுடன் கூடிய புதிய கட்டுமான தொழில்நுட்பத்தை கனடிய ஆய்வாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

எதிர்பார்க்கப்படும் பெரிய நிலநடுக்கங்களை எதிர்கொள்வதற்கான திறனுடன் வான்கூவர் நகரத்தில் எதிர்கால கட்டிடங்களை கட்டும் புதிய வழியை உருவாக்கியுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக (UBC) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கட்டமைப்பு முறையை, UBC யின் பிரயோக விஞ்ஞான பீட அமைப்புவியல் பொறியியலாளர் structural engineering பேராசிரியர் டாக்டர் டோனி யாங் தலைமையிலான குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் ஒரு 30 மாடி கட்டடத்தின் சிறிய மாதிரியை உருவாக்கி, அதனை பெரும் நிலநடுக்கங்களை ஒத்த உணர்வு சோதனைகளுக்கு உட்படுத்தினர்.

இந்த மாதிரி சாங்காயில் உள்ள நிலநடுக்க பொறியியல் குறித்த சர்வதேச ஆய்வு கூடத்தில் International Joint Research Laboratory of Earthquake Engineering பரிசோதிக்கப்பட்டது.

முதன்முறையாக, இத்தகைய பெரிய அளவிலான கான்கிரீட் மைய அமைப்பு (concrete-core structure) கொண்ட கட்டட மாதிரி, shake table-இல் சோதனை செய்யப்பட்டது என்பது உலகளவில் ஒரு சாதனையாகும்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article