15.4 C
Scarborough

நியூஸிலாந்துடன் மோதும் இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

Must read

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் விளையாடவுள்ள நிலையில் குறித்த தொடருக்கான சமரி அதபத்து தலைமையிலான 16 பேர் அடங்கிய இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர்கொண்ட இலங்கை குழாத்தில் ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி போன்ற முன்னணி வீராங்கனைகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தொடர் மார்ச் 04ஆம் திகதியும் ரி20 தொடர் மார்ச் 14ஆம் திகதியும் ஆரம்பமாகிறது. தொடருக்கான இலங்கை குழாம் எதிர்வரும் சனிக்கிழமை நியூஸிலாந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

சமரி அதபத்து (தலைவர்), ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, மனுதி நாணயக்கார, இமேஷா துலானி, அச்சினி குலசூரிய, உதேசிகா பிரபோதனி, சச்சினி நிசன்சலா, கெளசானி நுத்யங்கனா, இனோசி பெர்னாண்டோ, சுகந்திகா குமாரி, ரஷ்மிகா செவ்வந்தி, சேத்தனா விமுக்தி

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article