14.6 C
Scarborough

நாமல் ராஜபக்‌ஷவை கொலைச் செய்ய நினைத்திருந்தேன்!

Must read

ஒரு காலத்தில் தனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை கொலை செய்ய நினைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“எனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை நான் கொலை செய்ய வேண்டும் என ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று போய் அழகாகக் கதைத்தேன். அந்தளவு பகை எனது இதயத்திலிருந்தது.

நான் சிறுவயதாக இருந்த போது சிங்கள மக்கள் என்பவர்கள் பேய் போல என்று கூறினார்கள். சிங்களவர்கள் ஏனைய மக்களின் வயிற்றைப் பிளந்து சாப்பிடுபவர்கள் எனக் கூறினார்கள்.

அந்த காலத்தில் சிங்களவர்களைக் கண்டதில்லை, சிங்களம் புரியாது, அவர்களுடன் பழகியதும் இல்லை. அதனால் சிங்களவர்கள் தவறானவர்கள் என நினைத்துக் கொண்டிருந்தோம். சிங்களவர்களிடம் தமிழர்கள் எல்லாரும் புலிகள் எனக் கூறியிருந்தார்கள். இப்போது இது அத்தனையையும் முழுமையாக மாற்றியுள்ளோம்.” என்று கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article