19.5 C
Scarborough

நாமல் ராஜபக்சவை கைது செய்ய நடவடிக்கை?

Must read

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச இந்நாட்டு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்ற பாரிய அச்சம் தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அதன் காரணமாக அவரை சிறையில் அடைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தவறும் அளவுக்கு ராஜபக்சர்கள் மீதான அச்சம் அவர்களிடம் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக கூறிய அவர், இவ்வாறான காரணங்களால் ராஜபக்சர்களை குறிவைத்து வேட்டையாடும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி யோஷித ராஜபக்சவை இன்று (27) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் சந்தர்ப்பத்தில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயங்களை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் காலத்தை செலவிட வேண்டிய அரசாங்கம் அரசியல்வாதிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் பழிவாங்கிக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் வேட்டையாடல்களை நிறுத்தி விட்டு அரிசி, தேங்காய்களுக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் மூன்று வேளை உண்ணக் கூடிய விதத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் அவதானம் செலுத்தினால் நல்லது.” எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article