தனது அண்மைய வெளிநாட்டு பயணங்களும் முக்கிய தலைவர்கள் உடனான கலந்துரையாடல்களும், நாட்டின் பொருட்களுக்குபுதிய சந்தை வாய்ப்புக்கு அவசியமானவை என கனேடிய பிரதமர் மார்க் கார்னி,தெரிவித்துள்ளார்.
கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரியை விதித்துள்ள நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் உடனான சந்திப்பில், ஒட்டாவாவில் எட்டிய ஒப்பந்தங்களின் முன்னேற்றம், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உக்ரைன் மற்றும் காசா போர்கள் உள்ளிட்ட சர்வதேச முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு உட்பட நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள் முதலீடு செய்ய உள்ளதாகவும் இது கனேடியர்களுக்கு நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் நீண்டகால நலன்களையும் தரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துள்ள கனடிய பிரதமர், தற்பொழுது பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பிரதமர் காரணி நாட்டின் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சவால்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

