16.4 C
Scarborough

நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிக்க மன்னர் சார்ள்ஸூக்கு அழைப்பு!

Must read

புதிய நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து வைக்குமாறு கனடிய அரசாங்கம் மன்னர் மூன்றாம் சார்ள்ஸிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அழைப்பை மன்னர் ஏற்கும் பட்சத்தில், 1977 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மஹாராணி, நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர், முதன்முறையாக ஒரு மன்னர் கனடாவின் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து வைக்கக் கூடிய சந்த்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அழைப்பு தொடர்பில் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வ ஒப்புதல் அளிக்கவில்லை.

மன்னரின் வருகை தொடர்பான முடிவை அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பது நடைமுறை மரபாகும்.

எனினும், மன்னர் சார்ள்ஸ் கனடா விஜயம் செய்யக் கூடிய வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னர் பாராளுமன்றத்தை ஆரம்பிக்கும் போது , “Speech from the Throne” என அழைக்கப்படும் அக்கிராசன உரையை மன்னார் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதில், அரசு தனது திட்டங்கள் மற்றும் நெருங்கிய காலப்பகுதியில் முன்னுரிமை வழங்கும் நடவடிக்கைகள் விவரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், புதிய கனடா அரசு சிறுபான்மை பலத்தைக் கொண்டுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு மே 26ம் திகதி நடைபெறவுள்ளது என தற்போதைய நாடாளுமன்ற கால அட்டவணை குறிப்பிடுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article