15.3 C
Scarborough

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் பிரதமர் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தவறு.

Must read

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க Liberal அரசாங்கம் எடுத்த முடிவு தொடர்பாக பல சமூக அமைப்புக்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் கையெழுத்திட்ட ஓர் திறந்த கடிதத்தம் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை பற்றி விவாதிக்காமல் பிரதமர் முடிவு செய்திருக்கக் கூடாது என்று கூறுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Rona Ambrose மற்றும் தொலைக்காட்சி, வானொலி தொகுப்பாளர் Ben Mulroney உள்ளிட்டோர் கையொப்பமிட்ட கடிதத்தமும் பாராளுமன்றம் கூட்டப்படாத நேரத்தில் அரசாங்கம் அதன் வெளியுறவுக் கொள்கையில் இவ்வளவு குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்தது நாட்டின் ஜனநாயகத்திற்கே அவமானம் என்று கூறுகிறது.

பாலஸ்தீன ஆணையம் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்தும் வரை Hamas இன் எந்த தலையீடும் இல்லாமல் September இல் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா விரும்புவதாக Carney, July மாதம் கூறியிருந்தார்.

இன்று Carney க்கு எழுதிய கடிதம் பாலஸ்தீன அரசை இறுதியில் அங்கீகரிப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதில் கனடா தொடர்ந்து முன்னணிப் பங்கை வகிக்க வேண்டும் என்றும், ஆனால் ஒரு நிலையான பாலஸ்தீன அரசாங்கம் அமையும் வரை அத்தகைய நடவடிக்கை நடக்கக்கூடாது என்றும் கூறுகிறது.

எனினும், பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் Carney யின் அறிவிப்புக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தின. பாலஸ்தீன அங்கீகாரம் காலதாமதமானது, ஆனாலும் பாலஸ்தீனத்தை இராணுவமயமாக்க வேண்டிய கனடாவின் எச்சரிக்கைகள் பொருத்தமற்றவை என்று வாதிட்டனர்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article