இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இவ்விடயம் தொடர்பான ஒப்பங்கள் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், வெள்ளை மாளிகைக்குச் செல்லும் நான்காவது உலகத் தலைவர் இந்தியப் பிரதமர் ஆவார்.
இதன்போது ,பிரதமர் மோடி தனது சிறப்பு நண்பர் என்று கூறிய டிரம்ப், அவர் தன்னை விட மிகச் சிறந்த பேச்சாளர் எனவும், வளர்ந்து வரும் சீனாவை எதிர்கொள்ளும் போது, ஒத்த எண்ணங்களைக் கொண்ட நட்பு நாடாக இந்தியாவைப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ பரிசுகளில் ஒன்றான F-35 என்ற போர் விமானத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.