ஹாட் ஸ்டாரில் வெளியான ‘ஹார்ட் பீட்’ வெப் தொடரில் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சர்வா. இதன் மூலம் கவனிக்கப்பட்ட இவர், இப்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
அவர் கூறும்போது, “‘ஹார்ட் பீட்’ வெப் தொடரின் இரண்டு சீசனிலும் எனது குணா கேரக்டர் பேசப்பட்டது. இப்போது சினிமா படங்களிலும் நடித்துவரு கிறேன். அதர்வா நடிப்பில் வெளியாகும் ‘தணல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
நல்ல கதாபாத்திரங்கள், அது எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தான், நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.