1.3 C
Scarborough

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி காயம்

Must read

தமிழில், தில், கில்லி உள்பட பல்​வேறு படங்​களில் வில்​லன், குணசித்​திர வேடங்​களில் நடித்​திருப்​பவர் ஆஷிஷ் வித்​யார்த்​தி. இந்​தி, தெலுங்கு உள்பட பல்​வேறு மொழிகளில் நடித்து வரு​கிறார். இவர், தன்​னம்​பிக்கை பேச்​சாள​ராக​வும் இருக்​கிறார்.

இவரும் இவர் மனைவி ரூபாலி பரு​வா​வும் குவாஹாட்டியில் சாலையை கடக்​கும்​போது, வேக​மாக வந்த இருசக்கர வாக​னம் மோதி காயமடைந்​தனர். உடனடி​யாக மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.

இதுபற்றி வீடியோ ஒன்​றில் தெரி​வித்​துள்ள ஆஷிஷ் வித்​யார்த்​தி, “விபத்து நடந்​தது உண்​மை ​தான். எனக்கு பெரிய காயம் ஏது​மில்​லை. நான் நலமாக இருக்​கிறேன். என் மனை​விக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. உங்​களுக்​குத் தெரியப்​படுத்​தவே இதைச் சொல்​கிறேன். இதை பரபரப்​பாக்க வேண்​டிய​தில்​லை. விபத்தை ஏற்​படுத்​திய பைக் ஓட்​டிய​வர் குறித்​தும் விசா​ரித்​தேன், அவருக்​கும் சுய நினைவு திரும்​பி​விட்​டது. எல்​லோரும் நலமாக இருக்​கிறோம்​” என்​றார்​.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article