நடப்பாண்டில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிவரங்களின்படி, 2025 ஓகஸ்ட் 18 வரை மொத்தம் 15,00,656 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2025 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 132,368 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஓகஸ்ட் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில், இந்தியா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்னணி சந்தைகளாக உள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது.