8.2 C
Scarborough

தோல்வியுடன் விடைபெற்றார் பிரபல WWE வீரர் ஜான் சீனா!

Must read

சென்னை: பிரபல WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா, தன்னுடைய கடைசி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டே தனது கடைசி போட்டி குறித்த அறிவிப்பை அவர் தெரிவித்திருந்தார்.

90-ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத நினைவுகளில் WWE நிகழ்ச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த சண்டைப் போட்டியில் பல ‘சூப்பர் ஸ்டார்கள்’ வருகை தந்து, வென்று காட்டி, விடைபெற்றுள்ளனர். இதில் ஜான் சீனாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதற்கு காரணம் அவருடைய தனித்துவமான சண்டைப் பாணி. அதன் மூலம் உலக அளவில் ரசிகர்களை அவர் கவர்ந்தார். ரிங்குங்கள் சண்டைக்காக அவர் என்ட்ரி கொடுக்கும் அந்த தருணத்தில் ஒலிக்கும் பின்னணி இசை பலரது போனில் ரிங்டோனாக ஒலித்தது உண்டு.

கடந்த 2002-ம் ஆண்டு WWE-ல் அறிமுகமான ஜான் சீனா, WWE ஜாம்பவான்களான தி ராக், ட்ரிபிள் ஹெச், ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர் உள்ளிட்டொருடன் மோதியுள்ளார். 14 முறை WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில், தனது கடைசி போட்டியில் அவர் தோல்வியுடன் விடைபெற்றார்.

மல்யுத்தம் தவிர ’தி சூசைட் ஸ்குவாட்’, ‘ஃப்ரீலான்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article