1 C
Scarborough

தொகுதி மக்களுக்கு தான் துரோகம் செய்ய போவதில்லை!

Must read

Mark Carney யின் Liberal அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை வழங்குவதற்காக, கட்சி மாறுமாறு தன்னிடம் கோரப்பட்டதாகவும், ஆனால் தனது தொகுதி மக்களுக்கு தான் துரோகம் செய்ய போவதில்லை என்று British Columbia வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Vernon-Lake Country-Monashee தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான Scott Anderson, Conservatives கட்சியினரை உள்வாங்குவதற்கு Liberal கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Conservatives கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி ஆளுங்கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து Anderson இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கடந்த November இல் Chris d’Entremont மற்றும் கடந்த மாதம் Michael Ma ஆகிய இருவரும் வெளியேறியிருந்தனர்.

Conservatives கட்சித் தலைவர் Pierre Poilievre யின் தலைமைத்துவ பாணியும் அவர்கள் வெளியேறியதற்கு ஒரு காரணம் என்று இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.
​ஆனால், Poilievre ஐ பதவியிறக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ஒரு மென்மையான போக்கைக் கொண்ட Conservatives தலைவர் ஒருவரை நியமிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக Liberal களும் ஊடகங்களும் ஒரு கட்டுக்கதையைப் பரப்பி வருவதாக Anderson கூறுகிறார்.

தனது வாக்காளர்களுக்கும் தனது அடிப்படை கொள்கைகளுக்கும் செய்யும் இந்த துரோகத்திற்காக தனக்கு என்ன வழங்கப்பட்டாலும், தான் கட்சி மாறப்போவதில்லை என்று Anderson தெரிவித்தார். அவர் திங்கட்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், எனது தொகுதி மக்களுக்கு துரோகம் செய்வதைப் பற்றி நான் சிந்திப்பது என்பது ஒருபோதும் நடக்காத காரியம் எனவும் மேலும் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article