தென் அமெரிக்க நாட்டுக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த நில நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இருந்தாலும் இப் பகுதியில் அதகளவு மக்கள் வாழ்வதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது, இது பாரிய நில நடுக்கம் என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) கூறியுள்ளது.
10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இது 7.1 ரிக்டர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் அளவு 8.0 ரிக்டர் என பதிவிடப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் வேறு சில சர்வதேச செய்திகள் கூறுகின்றன.