இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்க இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி இரவு ஏழு மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஐந்துப் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் மூன்றுப் போட்டிகளில் இந்திய அணி இரண்டுப் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றிருநு்தது.
எனினும், நான்காவது போட்டி மோசமான சூழ்நிலை காரணமாக ஒரு பந்தேனும் வீசப்படாத நிலையில், கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் தொடரை தீர்மானிக்கும் வகையில் இந்த போட்டி தீர்க்கமானதாக மாறியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடரை 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவதுடன், இந்திய அணியின் தொடர்ச்சியான 14வது டி20 சர்வதேச தொடர் வெற்றியாகவும் அமையும்.
இதற்கிடையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்ய தென்னாப்பிரிக்கா முயற்சிக்கும்.
எனவே, இரு அணிகளும் முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 35 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் 20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

