15.1 C
Scarborough

தென்கொரியாவில் டீப்சீக்கிற்கு தடை விதிப்பு

Must read

சீனாவின் செற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) செயலியான டீப்சீக்கை தென் கொரியாவில் பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டீப்சீக்கின் ஆர்1 சாட்பொட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலகட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் டீப்சீக்கிற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பதில் அளித்த சீன ஏ.ஐ. நிறுவனமான டீப்சீக்,

“உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் தொடர்பில் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது,” என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article