15.1 C
Scarborough

துப்பாக்கிச் சூட்டில் 2 இந்திய மீனவர்கள் காயம் – இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் எதிர்ப்பு!

Must read

இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள பதில் இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்திற் கொண்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான ரீதியாக கையாள வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளத் தக்க விடயமல்ல எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிதல் கண்டிப்பான பின்பற்றப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article