கனடாவின் யோர்க்வில் பகுதியில் இடம்பெற்ற திடீர் வீட்டுத் தீ விபத்தில் 84 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அவென்யூ வீதி மற்றும் போஸ்வெல் வீதி பகுதிக்கு அருகே உள்ள வீடு தீப்பிடித்ததாக அவசர சேவை பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
தீ அணைப்பு பணியாளர்கள் மற்றும் அவசர மருத்துவ அணியினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அந்நேரத்தில் வீட்டில் இருந்திருந்த மூதாட்டி தீவிபத்தில் கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
விசாரணை நடைபெற்று வருவதால் வீட்டின் அருகாமையில் காணப்படும் சில வீதிகள் மூடப்பட்டுள்ளன.

