16.4 C
Scarborough

தீக்கிரையானது கிறிஸ்மஸ் மரம் – சிரியாவில் மக்கள் ஆவேசம்

Must read

சிரியாவில் கிறிஸ்மஸ் மரம் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் சுகைலாபியா என்ற நகரத்தில் கிறிஸ்மஸ் மரத்திற்கு நபர்கள் சிலர் தீமூட்டுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் சிலரே இதனை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது . இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்,

புதிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மத சிறுபான்மையினத்தவர்களை பாதுகாக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

தலைநகர் டமஸ்கஸில் உள்ள பப் டுமாவில் சிலுவையையும் சிரிய கொடியையும் ஏந்தியபடி பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சிலுவைக்காக எங்கள் ஆன்மாக்களை தியாகம் செய்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சிரியாவில் பல்வேறு இனத்தவர்களும் மதப்பிரிவினரும் வசிப்பது குறிப்பிடதக்கது.

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article