6.5 C
Scarborough

திருகோணமலை – கொழும்பு இரவு நேர ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

Must read

திருகோணமலை – கொழும்பு இரவு நேர ரயில் சேவையை மீண்டும் மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற கால நிலை மற்றும் டிட்வா புயல் காரணமாக குறித்த இரவு நேர ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் திருகோணமலை கொழும்புக்கான பகல் நேர ரயில் சேவை இயங்கினாலும் இரவு நேர சேவையின் மூலமாகவே அதிகளவான பயணிகள் பயணிக்கின்றனர்.

 உள் நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு நேர ரயில் சேவை மூலமே திருகோணமலை -கொழும்பு புகையிரத சேவையில் பயணிக்கின்றனர்.

இரவு நேர சேவையில் குளிரூட்டப்பட்ட முதலாம் தர பெட்டி காணப்படுவதனால் அதிகளவான வெளிநாட்டு பயணிகளும் கொழும்பில் இருந்து திருகோணமலையை வந்தடைகின்றனர்.

எனவே புகையிரத திணைக்களம் இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு இரவு நேர ரயில் சேவையை தாமதப்படுத்தாது மீள உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article