தாய்வானில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் ஐந்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்வானின் மத்திய நகரமான தைச்சுங்கில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தைச்சுங்கில் உள்ள வர்த்தக நிலையத்தில் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் 12 ஆவது மாடியில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிர்மாணப்பணிகள் காரணமாக 12 ஆவது மாடியில் உள்ள உணவகம் வெடிப்பு சம்பவம் ஏற்பட்ட வேளையில் மூடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.