14.9 C
Scarborough

தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்: வாஷிங்டன் சுந்தருக்கு விருது!

Must read

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களின் ஓய்வறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தத் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருதை வாஷிங்டன் சுந்தருக்கு வழங்க விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த விருதை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஜடேஜா உள்ளிட்டோர் இணைந்து வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கினர்.

விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் வாஷிங்டன் சுந்தர் பேசும்போது, “இங்கிலாந்து போன்ற மண்ணில் தொடர்ந்து 4 டெஸ்ட் விளையாடியதை நான் பெருமையாக கருதுகிறேன். களத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்தோம். களத்தில் நாம் உத்வேகமாக செயல்பட்டோம். எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்தத் தொடரில் 284 ரன்கள் குவித்த வாஷிங்டன் சுந்தர், 7 விக்கெட்களையும் கைப்பற்றினார். மேலும் டிராவில் முடிந்த டெஸ்ட் போட்டியில் சதமும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article