9 C
Scarborough

தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டேன்: கனடா பிரதமர் விளக்கம்

Must read

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து பேசும்போது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார் கனடா பிரதமர்.

தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த G20 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, கனடா பிரதமரான மார்க் கார்னி ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, ட்ரம்பை சந்திப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள்.

பேச்சுவார்த்தைகள் நடத்தினோம், நானும் பிஸியாகிவிட்டேன், மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசுவோம் என்று கூறினார் கார்னி.

அப்போது, கடைசியாக கார்னி எப்போது ட்ரம்புடன் பேசினார் என்பது குறித்து விளக்குமாறு மீண்டும் ஊடகவியலாளர்கள் கேட்க, சட்டென, எனக்கென்ன கவலை அல்லது யாருக்கு என்ன கவலை என்னும் ரீதியில், ’Who cares?’ என்று கூறிவிட்டார் கார்னி.

எதிர்க்கட்சியினர் அவரது பதில் குறித்து கடுமையாக விமர்சிக்கத் துவங்க, தற்போது தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார் கார்னி.

முக்கியமான ஒரு விடயம் குறித்து பேசும்போது, நான் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானவை என்று கூறியுள்ள கார்னி, நான் கனடாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கனேடியர்களுக்கு ஒரு உறுதி அளித்தேன்.

நான் தவறு செய்தால், அதை நான் ஒப்புக்கொள்வேன் என்று நான் கூறியிருந்தேன். அதன்படி, நான் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கார்னி.

canadamirror

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article