13.2 C
Scarborough

தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறார் Poilievre.

Must read

கனேடியர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்கும் முயற்சியில் கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை (TFW) இரத்து செய்து, தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துமாறு Conservative தலைவர் Pierre Poilievre அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறார். இந்த நடவடிக்கை நமது இளைஞர்களையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.

புதன்கிழமை ஒரு செய்திக்குறிப்பில், Conservative கள் தற்போதுள்ள தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் முறைக்கு பதிலாக சட்டபூர்வமாக நிரப்புவதற்கு கடினமாக இருக்கும் விவசாய தொழிலாளர்களுக்கான தனித்த திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

எதற்காக நம் இளைஞர்களை வேலையிலிருந்து நீக்குகிறார்கள், இறுதியில் சுரண்டப்படும் ஏழை நாடுகளைச் சேர்ந்த குறைந்த ஊதியத்திற்கு தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை ஏன் நியமிக்கிறார்கள் என்பதற்கு Liberal கள் பதிலளிக்க வேண்டும் என்று புதன்கிழமை Poilievre கூறினார். கனடாவின் குடியேற்ற முறையை Liberal கள் உடைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் 1970களின் முற்பகுதியில் இருந்து கனடாவில் நடைமுறையில் உள்ளது. மேலும் அதன் தொடக்கத்திலிருந்து பல தசாப்தங்களில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர் Stephen Harper இன் அரசாங்கம் இந்த திட்டத்தை சீர்திருத்தியது, தற்காலிக வெளிநாட்டு பணியாளரை பணியமர்த்த விரும்பும் வணிகங்கள் முதலில் ஒரு கனேடிய குடிமகனையோ அல்லது நிரந்தர குடியிருப்பாளரையோ வேலைக்கு அமர்த்த முடியவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது.

அந்த நேரத்தில் Harper இன் அமைச்சரவையில் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த Poilievre இந்த நடவடிக்கையை ஆதரித்தார். கனடா புள்ளிவிவரங்களின் படி, அண்மைக காலமாக கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பணி அனுமதி பெற்றோ அல்லது இல்லாமலோ study permit வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையினாலோ ஏற்படக்கூடும்.

எவ்வாறாயினும், Statistics Canada வின் புள்ளிவிபரங்களின் படி விவசாயம், வனவியல், மீன்பிடி, Accommodation மற்றும் உணவு சேவைகள் உள்ளிட்ட சில துறைகள் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தையே பெரிதும் நம்பியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article