புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசியல் தீர்வு விடயம் கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார் என தமிழ் மின்னிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“ தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்குத் தமிழ் மக்களும் ஆணை வழங்கியுள்ளார்கள். எமது ஜனாதிபதி மீதும், எமது அரசு மீதும் தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம்.
வடக்கு, கிழக்குக்கு நாம் விஜயம்செய்யும் ஒவ்வொரு தடவையும் அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்களும்,அவர்களின் பிரதிநிதிகளுடன் எம்முடன் பேசுவார்கள். எனவே, அவர்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவோம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.