டொரண்டோ, ஸ்காபரோவில் இயங்கிவரும் யுகம் வானொலி அறிவிப்பாளர் ஆர்.ஜே. சாய் ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களைத் தயாரிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். தனது பிறந்த தினத்தையொட்டி இந்த அறிவிப்பை அவர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
ஆர்.ஜே. சாய் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவுள்ள படங்களுக்கு பிரெய்ன், ஷாம் தூம் என பெயரிடப்பட்டுள்ளன. பிரெய்ன் படத்தை தாதா பவுடர் மற்றும் ஹரா படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்க இருக்கிறார். ஷாம் தூம் படத்தின் கதையை ஆர்.ஜே.சாய் எழுத நவீன் குமார் படத்தை இயக்குகிறார்.
படத்தின் அறிவிப்பை வெளியிட்டு கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் ஆர்.ஜே. சாய்,
‘கனடாவில் வாழ்ந்து வந்தாலும் தமிழ் திரையுலகில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். எனவே பிரெய்ன் மற்றும் ஷாம் தூம் படங்கள் வாயிலாக எனது திரைப் பயணத்தை ஆரம்பிக்கிறேன். 2 படத்தின் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கப்பட்டு 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. ஷாம் தூம் படத்தில் கதாநாயகியாக பிரானா நடிக்கிறார். படத்தில் நடிக்க இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் விரைவில்
வெளியாகயிருக்கிறது என்று தெரிவித்தார்.

