15.4 C
Scarborough

தமிழர் பகுதிகளின் பிரச்சினைகள் குறித்து நிலைப்பாட்டை அறிவியுங்கள் – சாணக்கியன் எம்.பி கோரிக்கை

Must read

தமிழர் பகுதிகளிலுள்ள பிரச்சினைகள தொடர்பான தமது நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரசியல் காரணங்களுக்காக ஆயுதமேந்திப் போராடிய அரசியல் கைதிகள் இன்றும் விடுதலை செய்யப்படாத நிலையில் சிறையில் இருக்கின்றார்கள்.

இவர்கள் ஆரம்பத்திலே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது பல்வேறு வழக்குகளின் கீழ் உள்ளார்கள்.

இவ்வாறிருக்க, இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவது மட்டுமன்றி உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம்.

மேலும், தொல்பொருள் திணைக்களத்தினால் இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருந்ததில்லை. ஆனால், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள்.

குறிப்பாக, குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, திரியாய் பிரதேசம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article