மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில், ரயில் பாதயையில் நின்று கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி நேற்று (10) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த நாகேந்திரன் கரிகரராஜ் என்ற 23 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, நேற்றிரவு தண்டவாளத்தில் நின்று மனைவியுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சடலம் ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.