மொன்றியால் – ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (YUL) நடைபெற்று வரும் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகள் மற்றும் வாகன நிறுத்துமிடத் தட்டுப்பாடு காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் பயணம் செய்வோருக்கு விமான நிலைய நிர்வாகம் (ADM) அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.
எந்த நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்துவிடுமாறு பயணிகள் கோரப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் முக்கிய அடையாளமாக இருந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi-level parking) மற்றும் P5 EconoParc ஆகியவை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.
இவை இடிக்கப்பட்டு புதிய நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதால், வாகனங்களை நிறுத்தப் போதிய இடவசதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

