அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்ப்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளிலும் தாக்கம் செலுத்துகிறது.
7-4 என்ற பிரிவிற்கமைவான தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற டிரம்பின் வாதத்தை அமெரிக்க பெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து, அவை “சட்டத்திற்கு முரணானது என்பதால் செல்லாது” என்று கூறியுள்ளது.
எவ்வாறாயினும் இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தை நாட நிர்வாகத்திற்கு அவகாசம் அளிக்கும் வகையில் எதிர்வரும் அக்டோபர் 14 வரை இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தையும் அதன் ட்ரூத் சோஷியல் மீதான தீர்ப்பையும் டிரம்ப் விமர்சித்து, “இந்த தீர்ப்பு அனுமதிக்கப்பட்டால், இந்த முடிவு உண்மையில் அமெரிக்காவை அழித்துவிடும்” என்று கூறியுள்ளார்.
“இந்த வரிகள் எப்போதாவது நீக்கப்பட்டால், அது நாட்டிற்கு ஒரு முழுமையான பேரழிவாக இருக்கும். இது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும், மேலும் நாம் வலுவாக இருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.